நடிகை காஜல் அகர்வால் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2‘ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் எற்கனவே அவர் நடித்த கோஷ்டி என்ற படம் கடந்த மார்ச் 17-ம் தேதி திரைக்கு வந்தது. அதையடுத்து தற்போது காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘கருங்காப்பியம்‘ என்ற படம் ஏப்ரல் 7-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இப்படத்தில் காஜல் அகர்வால் உடன் ரெஜினா, ஜனனி ஐயர், ரைசா வில்சன், கலையரசன், கருணாகரன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்து பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் ‘பாரிஸ் பாரிஸ்‘ என்ற படமும் அடுத்தபடியாக திரைக்கு வர தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.










