பாலிவுட் நடிகையான ஆலியா பட் கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்‘ படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் அவர் குறைவான காட்சிகளே நடித்து இருப்பார். மேலும் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் கூட, ஜூனியர் என்டிஆர் உடன் தான் அவர் இணைந்து நடிக்கும் காட்சிகள் அதிகமாக இருந்தன.
அந்த வகையில், படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆர் உடன் நட்பாக பழகினார். இந்நிலையில் தற்போது ‘ஆர்ஆர்ஆர்‘ படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைத்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ஜூனியர் என்டிஆரின் குழந்தைகளான அபய் மற்றும் பார்கவா இருவருக்கும் தன்னுடைய சொந்த பிராண்ட் நிறுவனத்திலிருந்து அழகான ஆடைகளை பரிசாக அனுப்பி வைத்துள்ளார் நடிகை ஆலியா பட்.
இந்த உடைகளை அணிந்து கொண்ட தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜூனியர் என்டிஆர், ஆலியா பட்டுக் நன்றி தெரிவித்தது உடன் தன் பெயரிலும் இதேபோன்று ஒரே பரிசு ஆலியா பட்டிடம் இருந்து எப்போது வரும் என எதிர்பார்ப்பதாகவும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.










