கடற்படை கப்பல் கடலில் மூழ்கியது – 75 பேர் பத்திரமாக மீட்பு – தாய்லாந்தில் பரபரப்பு

தாய்லாந்து நாட்டில் ரோந்து சென்ற கடற்படை கப்பல், திடீரென வீசிய காற்றில் சிக்கி, கடலில் கவிழ்ந்தது. உடனடியாக மீட்பு படையினர் சென்று, அதில் இருந்த 75 பேரை பத்திரமாக மீட்டனர்.

கடந்த சில மாதங்களாக பல்வேறு புயல்கள் வீசுவதுடன், மழை கொட்டி தீர்த்தது. தற்போது, குளிர்காலம் என்பதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். அதே நேரத்தில், பலத்த சூறைக்காற்று வீசுவதால், பழைய கட்டிடங்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், தாய்லாந்து நாட்டின் கடற்படை கப்பல் தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் ரோந்து சென்றது. அப்போது திடீரென பலத்த காற்று வீசியது. இதில், நிலை தடுமாறிய கப்பல், கடலில் கவிழ்ந்தது. இதனால், கடல்நீர் கப்பலுக்குள் புகுந்ததையொட்டி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, 3 போர் கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்கள் மூலம் கப்பலில் பயணம் செய்து, தண்ணீரில் தத்தளித்த 75 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் 31 பேர் கடலில் தத்தளித்து இருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். காற்று வேகமாக வீசுவதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கப்பலில் புகுந்த நீரை வெளியேற்ற இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. தெற்கு தாய்லாந்தில் புயல்கள் ஏற்பட்டு கடுமையான வெள்ள பாதிப்பும் ஏற்படுகிறது. கப்பல்களை கரையில் நிறுத்தி வைக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்