பாராசிடமால் உள்பட 127 மருந்துகளின் விலை குறைப்பு

தேசிய மருந்துகள் விலை கொள்கையால் இந்தாண்டில் 5வது முறையாக பாராசிடமால் உள்பட 127 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு பாராசிடமால் மருந்தின் விலை தற்போது 2வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மெட்ஃபார்மின் உள்பட சில மருந்துகளின் விலைகள் மட்டும் உயர்ந்துள்ளன. விலை குறைக்கப்பட்ட 127 மருந்துகளில் பாராசிடமால், அமோக்சிலின் உள்பட பல மருந்துகள், நோயாளிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால், மக்களுக்கு பெரிய அளவில் இந்த விலை குறைப்பு பயனளிக்கும் என கூறப்படுகிறது.

பாராசிடமால் (650 எம்ஜி) மாத்திரை தற்போது ஒரு மாத்திரை ரூ.2.3 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் போது ஒரு மாத்திரை விலை ரூ.1.8 காசுகளாக குறையும். இதேபோல், தொற்றுநோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளின் விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தவேளையில், 2ம் வகை நீரிழிவுக்கு கொடுக்கப்படும் மெட்ஃபார்மின் (500 எம்ஜி) மாத்திரை விலை ஒன்று ரூ.1.7 காசுகளாக இருந்தது. ஆனால் தற்போது, ரூ.1.8 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மெட்ஃபார்மின் கூட்டு கலவையான மாத்திரைகளின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் பலமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பாராசிடமால் உள்பட மாத்திரைகளின் விலை குறைந்திருப்பது ஒரு பக்கம் வரவேற்கப்பட்டாலும், ஏராளமான முதியோர் பயன்படுத்தும் நீரிழிவுக்கான மாத்திரை உள்ப சில மாத்திரைகளின் விலைகள் அதிகரித்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்