குஷ்புவின் அண்ணன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்தார். இதையொட்டி அவர், மன வேதனையில் இருப்பதாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு கமான்ட் செய்த ஒருவரை, எனத கால் செருப்பு 41 சைஸ் என கூறி கொந்தளித்துள்ளார்.
திரைத்துறையில் வலம் வந்த குஷ்பு, கற்பு பற்றி பேசியதால், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். அவரை கண்டித்து பல போராட்டங்கள் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. அந்த நேரத்தில் அவருக்கு உதவி செய்யவோ, துணை நிற்கவோ யாரும் முன் வரவில்லை. இதையடுத்து அவர், தனது பாதுகாப்புக்காக சில அரசியல் கட்சியை சேர்ந்த டிவி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சென்றார். ஆனாலும் அவரை சில அரசியல் கட்சிகள் விடாமல் துரத்தின.
பின்னர் குஷ்பு, திமுகவில் இணைந்தார். அங்கு பல்வேறு தேர்தல்களுக்காக பல மாவட்டங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து பாஜகவில் இணைந்தார். இந்தவேளையில், அவர் தனது அன்றாட பணிகள் உள்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.
சமீபத்தில் குஷ்புவின் அண்ணன், உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் வேதனையில் இருந்த அவர், அண்ணனின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டு கொண்டார்.
இந்நிலையில், குஷ்புவின் டுவிட்டர் பதிவுக்கு கமாண்டு போடும் விதமாக, பிரவீன் சிட்டி என்ற திமுக பிரமுகர், ‘அக்காவுக்கு சின்னத்தம்பி ஞாபகம் வந்திருக்கும்’ என குறிப்பிட்டு இருந்தார். இதனால் கொதிப்படைந்த குஷ்பு,’என் செருப்பு சைஸ் 41. தைரியமிருந்தா நேர்ல வாடா. இதுதான் உன் கீழ்த்தரமான புத்தி. திருந்த மாட்டீங்களாடா. நீயெல்லம் கலைஞரின் தொண்டனா’ என காட்டமாக பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.










