இலங்கையில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்திருக்கும் நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமை சமுதாயம் என்ற பெயரில், ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரஹாசனும், சத்யராஜின் மகள் திவ்யாவும் இணைந்து ஈழத்தமிழர் நலனுக்காக போராடி வருகின்றனர். இதைப்பற்றி நடிகர் சத்யராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘ இதில் நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இந்தத் திட்டத்தில் பயனுள்ள விஷயங்கள் அடங்கியிருக்கிறது. முதலாவது, குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் மற்றும் விவசாயம் என்ற அற்புதமான தொழிலை கற்றுக்கொள்வது அதில் அந்த குழந்தைகளின் பெற்றோரையும் ஈடுபடச்செய்வது எனப்பல விஷயங்கள் அடங்கியிருக்கிறது. அவர்களுக்கு ஒரு புதிய தொழிலை கற்றுக்கொள்வதன் வாய்ப்பு அமைய இருக்கிறது.
இந்தப்பணிகளில் பூங்கோதை சந்திரஹாசனும், என் மகள் திவ்யாவும் இணைந்து செயல்படுவதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இந்த நேரத்தில், எம்.ஜி.ஆரின், “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி“ என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. மேலும்










