‘இளையராஜாவின் தரிசனம் கிடைத்தது பெருமகிழ்ச்சி‘ – அண்ணாமலை நெகிழ்ச்சி பதிவு

இளையராஜாவின் பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருந்தார்.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க. வின் தலைவரான அண்ணாமலை இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு இளையராஜாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

இதனையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், “இன்று மாலை இசைஞானி இளையராஜா அவர்களது இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவாசகத்தை சிம்பொனி வடிவில் தந்து நம் மனதை இசையால் உருக்கிய கலைத்தாயின் தலைமகனை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள் என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை இசைஞானி அவர்களது இசை இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கும் மெய்ப்பிக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

மொழி இனப் பாகுபாடு இன்றி மக்களின் எல்லாவித உணர்வுகளுக்குமான தீர்வாக விளங்கும் இசை கடவுள் எங்கள் ராகதேவன் இளையராஜா அவர்கள் நீண்ட காலம் தமது இசையால் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்“ என பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்