‘அப்பாவை வைத்து படம் இயக்குவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை‘ – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்‘ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இவர் 7 வருட இடைவெளிக்கு பின் தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரஜினி நடிக்கும் மொய்தீன்பாய் கேரக்டர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை இடம் பெறுவதாகவும், ரஜினிக்கு இப்படத்தில் இரண்டு சண்டை காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “உங்களை பார்த்து வளர்ந்தேன். ஆனபோதிலும் உங்களை வைத்து படம் இயக்குவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. உங்களுடன் இணைந்து இந்த உலகை பார்க்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் உங்களை அதிகமாக நேசிக்கிறேன் அப்பா“ என நெகிழ்ச்சி உடன் தெரிவித்து இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்