ஆதி மனிதன் தோன்றிவதற்கு முன், உருவான உயிரினம் குரங்கினம். இன்று, அந்த குரங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆதி மனிதன் காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து வந்தான். பின்னர் காலப்போக்கில் நாகரித்தை தாண்டி, தற்போது அசுர வளர்ச்சியுடன் விண்ணில் செயற்கைக்கோள் ஏவும் அளவுக்கு முன்னேறியுள்ளான். ஆனால், சில நேரங்களில் மனிதனின் குணம், அவனது பழங்காலத்தை நோக்கி சென்றுவிடும். அதை பார்க்கும்போது குரங்கு சேட்டை செய்கிறானே என பேசுவதும் உண்டு.
ஆம்… ஏன் அந்த வார்த்தை வருகிறது. சிறு குழந்தை தவறு செய்தால், தாயை போல பிள்ளை, நூலை போல சேலை என சொல்கிறார்கள். அதேபோல் அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்துடுச்சு என கூறுவார்கள். இந்த சைகைகள், சேட்டைகள் அனைத்தும், பெற்றோரிடம் இருந்து வந்தது இல்லை. அனைத்துமே, மனிதனின் முற்காலத்தை சேர்ந்ததே. அது அவன், ஆதி மனிதனுக்கு முன் இருந்த குரங்கிடம் இருந்து வந்ததாகவே கூறப்படுகிறது. இதனால் குரங்கில் இருந்து மனிதன் வந்துவிட்டான் என்று பலரும் பேசுவதை நாம் கேட்டுள்ளோம்.
சரி இன்று நமது விஷயத்துக்கு வருவோம். இன்றைய நாள் டிசம்பர் 14. ஆனால் இந்நாள் யாருக்காக கடைபிடிக்கப்படுகிறது தெரியுமா? ஆம் இன்று உலக குரங்குகள் தினம்.
இன்று, உலகம் முழுவதும் குரங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆதிகாலத்தில் பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களை குரங்குகள் உண்டு வளர்ந்தன. காலப்போக்கில் மனிதன் அதனை உண்ண ஆரம்பித்து விட்டான். இதனை, ஆங்கிலேயே இயக்கையியல் அறிஞர் டார்வி, குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







