ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல்வேறு சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்தது. குறிப்பாக அந்த படத்தில் வந்த ‘நாட்டு நாட்டு‘ பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. மேலும் இப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என நேற்று(ஜன.24) அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், ஆஸ்கர் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள ‘ஆர்ஆர்ஆர்‘ படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ‘நாட்டு நாட்டு‘ பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள சூர்யா படக்குழுவினர் அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.










