ஆபாசமாக நடித்ததற்கு விளக்கம் அளித்த தமன்னா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த போதிலும், இதுவரை கவர்ச்சியில் எல்லை மீறாமல் இருந்து வந்த தமன்னா தற்போது அதை உடைத்து இருக்கிறார்.

இதற்கு காரணம் அவர் ஆபாசமாக நடித்துள்ள வெப் தொடர்கள் தான். இவர் நடித்து வரும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2‘ தொடரில் படுக்கை அறையில் தமன்னா ஆபாசமாக நடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் தமன்னாவை விமர்சித்து வருகின்றனர்.

அந்த தொடருக்கு முன்னதாக ஓ.டி.டி. தளத்தில் தற்போது வெளியாகி உள்ள ‘ஜி கர்தா‘ வெப் தொடரிலும் தமன்னா அளவுக்கு மீறிய அரை நிர்வாண காட்சிகளில் நடித்து இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். படுக்கை அறை காட்சிகளிலும் எல்லை மீறி இருக்கிறார். இரட்டை அர்த்த வசனங்களும் உள்ளன. பணத்துக்காக இப்படியெல்லாம் நடிக்கலாமா என்று பலரும் தமன்னாவை விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு தற்போது நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கமான காட்சிகளில் நடித்தேன். ‘ஜி கர்தா‘ வெப் தொடர் பள்ளி பருவத்து காதல் கதை. எனவே அந்த கதைக்கு நெருக்கமான காட்சிகள் தேவையாக இருந்தது. காதல் உறவை விளக்கவும் கதையை வலுப்படுத்தவுமே அப்படி நடித்தேன் “ என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்