“ஆதார் இணைப்புக்கு இனி அவகாசம் இல்லை”- அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (பிப்.28) நிறைவடையும் நிலையில், கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் இனி நீட்டிக்கப்படாது. 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைந்துள்ளனர்” என்றார்.

ஆதாரை இணைக்காதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் https://www.tangedco.org/en/tangedco/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று மின் இணைப்பு எண் மற்றும் தொலைபேசி எண், ஆதார் எண் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்