அழுகிய நிலையில் சடலமாக கிடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை எண்ணூர் அடுத்த எர்ணாவூரை சேர்ந்தவர் தனசேகர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி ஏற்பட்ட தகராறில், தனசேகரன், தனியாக வீடு எடுத்து தங்கினார். தீபா, திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தனசேகரனை யாரும் பார்க்கவில்லை. இதனால், இன்று காலை அவரது நண்பர்கள், தனசேகரனை தேடி வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு கடும் துர்நாற்றம் வீசியது.
உஅன இவஙதகஙள. எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனா. அப்போது தனசேகர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். உடலில் காயங்கள் இருந்தது.
இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலில் காயங்கள் இருப்பதால் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.










