கோயில்களில் சிறப்பு தரிசன டிக்கெட் ரத்து – அமைச்சர் தகவல்

கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும்: அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னையில் இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் உள்ள கோயில்களின் வருவாய் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதில், சிலர் சிறப்பு தரிசனம் கிடைக்காமல் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்வதற்கு, வருவாய் பொறுத்து மாற்றம் செய்யப்படும். இதற்காக படிப்படியாக சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைக்கப்பட்டு, முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

இம்மாதம் 22ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வைகுண்ட ஏகாதசிக்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.200ல் இருந்து ரூ.100 என குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்