அக்காவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில், ‘மாமன்னன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ‘சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘தசரா‘ இந்த மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து சிரஞ்சீவி தங்கையாக ‘வேதாளம்‘ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா சங்கர்‘ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதிக்கு இன்று பிறந்தநாள். அதற்கு வாழ்த்து தெரிவித்து இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், “எனது கேலரியில் இருந்து இந்த அழகான நினைவுகள் மூலம், உங்களது பிறந்தநாளில் உங்களுக்கு நிறைய அன்பு, அரவணைப்பு, அன்பான வாழ்த்துக்களை அனுப்புகிறேன். அக்காவே, உங்களின் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கட்டும்“, என வாழ்த்து கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்