லிப் லாக் காட்சியில் எதற்கு நடித்தேன் – நடிகை அமலா பால் விளக்கம்

மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜ்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ள படம் ‘ஆடு ஜீவிதம்‘. பிரபல எழுத்தாளர் பென் யாமின் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார் பிளசி; கடன் தொல்லையால் அவதிப்படும் பிருத்விராஜ் அந்த கடனை அடைப்பதற்காக சவுதிக்கு செல்வதும், அங்கு ஆடு மேய்ப்பவராக மாறி அவர் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்ட கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அதில் இடம் பெற்றிருந்த பிருத்விராஜ் அமலாபாலின் லிப்லாக் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அது குறித்து அமலா பாலிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் கூறியதாவது, “ ஆடு ஜீவிதம் படத்தின் கதையை சொன்னபோது லிப்லாக் காட்சி இருப்பதை சொல்லிவிட்டார்கள். இந்த படத்தின் கதைக்கும் காட்சிக்கும் அது அவசியப்பட்டதால் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டேன். என்னை பொருத்தவரை கதைக்கு தேவைப்பட்டதால் எது வேண்டுமானாலும் செய்யலாம். அந்த வகையில் ‘ஆடை‘ என்ற படத்தில் நிர்வாணமாக கூட நடித்தேன்.

அதனால் கதைக்கு ஏற்ப நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதிலும் ஆடையே இல்லாமல் நடித்த எனக்கு லிப்லாக் காட்சியில் நடிப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை“ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்