சன்டிவியில் ஒளிபரப்பான ‘ரோஜா‘ தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா நல்காரி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
இவர் தற்போது ஜீ தமிழின் ‘சீதா ராமன்‘ தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் ராகுல் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் திடீரென மலேசியாவுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு சீரியல் ஷூட்டிங்கிற்கு கூட மலேசியாவில் இருந்து தான் வந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் சீரியலிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து ப்ரியங்கா நல்காரி கூறியதாவது, “ சீதா ராமன் தொடர் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் கணவர் சொல்கிற போது அதை தட்ட முடியவில்லை. அதனால் சீரியலை விட்டு விலகுகிறேன்‘ என்று கூறியுள்ளார்.










