நடிகை மீது அவதூறு.. எல்லை மீறி பேசிய கூல் சுரேஷ்..!

சினிமா நடிகரான கூல் சுரேஷ் இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வெள்ளிக்கிழமையானால் சின்ராசை கையிலேயே பிடிக்கமுடியாது என்பது போல், திரையில் வெளிவரும் படங்களை பற்றி விமர்சனம் செய்து தன்னை பிரபலப்படுத்தி வருகிறார். மேலும் இவர் பலரை தவறாக விமர்சனம் செய்து சிக்கியும் உள்ளார்.  சமீபத்தில் ‘விருமன்‘ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சங்கர் மகளை விமர்சித்து அதன்பின் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி ரம்யா நம்பீசன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள ‘தமிழரசன்‘ படத்தை பார்த்த பின் நடிகர் கூல் சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் “தானும் சினிமாவில் தான் இருக்கிறேன், தவறாக எடுக்க வேண்டாம் ரம்யா. அனைத்து படங்களிலும் உங்களை ஏன் மெத்தையில் போட்டு புரட்டி எடுக்கிறார்கள்“ என அவதூறாக பேசினார். இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள் அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுப்பியதால் அங்கு சிறிறு நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்