ஷாக்: பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகும் மற்றொரு பிரபலம்!

விஜய் டிவியில்  சூப்பர் ஹிட் அடித்த பாக்கியலெட்சுமி தொடரில் கதாநாயகனாக  நடித்து வந்த சதீஷ் அண்மையில் விலகுவதாக அறிவித்தார். தற்போது அவரை தொடர்ந்து இரண்டாவது நாயகியாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டியும், ராதிகா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பல ரசிகர்களின் கேள்விகளுக்கு ரேஷ்மா பதிலளித்தார். அப்போது ஒருவர் சதீஷ் சீரியலை விட்டு விலகுவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா ‘சதீஷ் விலகியது பற்றி உறுதியாக தெரியாது. அடுத்த ஷெட்யூலில் நான் இருந்தால் உங்களுக்கு சொல்கிறேன்‘ என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் சதீஷை போல் ரேஷ்மாவும் சீரியலிலிருந்து விலகிவிட்டாரா? பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா?  என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்