நடிகர் மன்சூர் அலிகான் தற்போது கதாநாயகனாக ‘சரக்கு‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார். நாஞ்சில் சம்பத் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவி மரியா, லொள்ளு சபா மனோகர், மதுமிதா, வினோதினி மற்றும் பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஜே. ஜெயக்குமார் இயக்குகிறார். மன்சூர் அலிகான் தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படம் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறும்போது, “தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து ஒரு புரட்சி படைப்பாக இந்த படம் உருவாகிறது“ என்றார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ள நிலையில், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.










