கைவிட்ட சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜ்க்கு உதவிய நடிகர் ஜெயம் ரவி!

இயக்குனர் பாண்டிராஜ் ‘கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை‘ என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் கடைசியாக சூர்யா நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்‘ படம் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவரின் அடுத்த பட அறிவிப்பில் தாமதம் நிலவுகிறது.

பாண்டிராஜ் அறிமுகப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயனே அவர் கதையில் நடிப்பதாக முதலில் தகவல் வந்தது. ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லையாம். அவரை தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி, விஷால் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அவர்களும் இப்படத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இயக்குனர் பாண்டிராஜை அழைத்து ஜெயம் ரவி என்னை வைத்து படம் இயக்குங்கள் நான் உங்களுக்கு படம் தருகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் அவரது ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்