விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் நடிகர் சிம்பு

சமீபத்தில் ‘வாரிசு‘ திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 10 நாட்களில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலாகி பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்தது. இந்த வெற்றியை படக்குழுவினர் ஹைதரபாத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிலையில் ‘தளபதி 67‘ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

மேலும் இப்படத்தில் மிஷ்கின், ஜிவிஎம், விக்ரம், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தில் விஜய்க்கு மெயின் வில்லனாக சிம்பு நடிக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்தநாள் என்பதால் அதே தேதியில் இந்த அப்டேட் வரும் என்று லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல் தீயாக பரவி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்