திருமணத்திற்கு பின் தாய் வீட்டுக்கு வந்த ஹன்சிகா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி தனது நீண்ட நாள் நண்பரும், தொழில் பங்குதாரருமான சோஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு இடையே திருமணம் நடக்கவிருப்பதாக நவம்பர் 2-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் பற்றிய தகவலை உறுதி செய்தார். இதையடுத்து இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை  அரண்மனையில் நடைபெற்றது.

மேலும் இவர்களது திருமண வீடியோவை பிரபல ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் வாங்கியது. இந்நிலையில்,  திருமணத்துக்கு பின் முதல் முறையாக நடிகை ஹன்சிகா சென்னை வந்துள்ளார்.  விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பணி நிமித்தமாக சென்னை வந்த அவர் , விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது “திருமணத்திற்கு பின் தாய் வீட்டுக்கு போவது போல உணர்கிறேன்“ என்றார். நீங்கள் என் மீது பொழியும் அன்பிற்கு நன்றி என்றும் “love you all“ என்று சொல்லிவிட்டு சென்றார் ஹன்சிகா.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்