சின்னத்திரையில் அறிமுகமாகி அசத்திய கவின் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். இதன்பின் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்தது. இவர் முதலில் நாயகனாக அறிமுகமான படம் ‘லிப்ட்‘ ஆகும். இதைத் தொடர்ந்து இப்போது இவர் ‘டாடா‘ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணாதாஸ் நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளார். ஜென் மார்டினின் பெப்பியான இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான பணிகள் நடக்கின்றன. சமீபத்தில் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் பிப்ரவரி 10-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாவதாக இப்படக்குழு அறிவித்துள்ளது. இதனை வழக்கம்போல் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.









