ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘யானை‘ படம் திரைக்கு வந்ததையடுத்து அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘பார்டர்‘ படம் டிசம்பரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா, ஸ்டெபி பட்டேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
அருண் விஜய் மற்றும் அறிவழகன் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள இந்தப் படம் ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு சில பிரச்சனைகளால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாதம் கண்டிப்பாக வெளியாகும் என்று கூறிவந்த நிலையில், தற்போது ‘பார்டர்‘ படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.










