ரிலீஸ்க்கு காத்திருக்கும் விஜய்சேதுபதியின் ‘விடுதலை‘ திரைப்படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடிக்கும் படம் ‘விடுதலை‘. இதனை ஆர். எஸ். இன்போடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ‘இளையராஜா‘ இசையமைக்கிறார். இரண்டு பாகமாக தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

மேலும் ‘பவானி ஸ்ரீ‘, ‘பிரகாஷ்ராஜ்‘, ‘கௌதம் வாசுதேவ் மேனன்‘, ‘ராஜீவ் மேனன்‘ நடிக்கிறார்கள். மேலும் இதை ‘வேல்ராஜ்‘ ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து விட்டதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்