அமெரிக்காவில் தூதரக உயர் அதிகாரியாக, இந்திய வம்சாவளியான ரிச்சர்டு ஆர்.வர்மாவை நியமனம் செய்து, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு.
அமெரிக்காவின் வெளியுறவு துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை அமைச்சராக இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர். வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
ரிச்சர்டு ஆர்.வர்மா,இந்தியாவுக்கான அமெரிக்க தூதர். 2014 செப்டம்பர் முதல் இப்பணியில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009ம் ஆண்டு அமெரிக்க அரசு சட்டமன்ற அலுவல்கள் துறை துணைச் செயலாளராக ரிச்சர்டு ஆர்.வர்மாவை நியமித்தார். பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றும் முதல் அமெரிக்க வாழ் இந்தியர் என்பது.
அதிபரின் நுண்ணுறிவு ஆலோசக வாரியத்துக்கு நியமிக்கப்பட்டதுடன், பேரழிவுக்கான ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாத ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த காலங்களில் பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
கடந்த 1994ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை, அமெரிக்க விமானப் படையில் பணியாற்றினார். அமெரிக்க வெளியுறவு துறையில் சட்ட விவகாரங்களுக்கான உதவி அமைச்சராக 2009 முதல் 2011ம் ஆண்டு வரை இருந்தார். வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










