கொரோனா அதிகரிப்பால் உயிர் பலி எண்ணிக்கையும் அதிகமாகும் – டாக்டர்கள் எச்சரிக்கை

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பலி எண்ணிக்கையும் அதிகமாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவில், பல்வேறு இடற்பாடுகளை ஏற்படுத்தியது. பொருளாதாராம், வாழ்வாதாரம் உள்பட பலவற்றை மக்களை இழந்தனர்.  பின்னர், அரசின் தீவிர முயற்சியால், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. பொதுமக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

அதேநேரத்தல் புராண கதைகளில் வருவதைபோல், வில்லில் இருந்து அம்பை எய்தவனிடமே மீண்டும் மீண்டும் போய் சேரும் வகையில், தற்போது கொரோனா தொற்று சீனாவில் அதிகரித்து வருகிறது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று தொடர்புடைய உயிரிழப்புகளும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகிறது. கடந்த சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடி கொண்டே இருக்கிறது.

மீண்டும் கொரோனா பரவி வருவதால், சடலங்கள் அடக்கம் செய்வதிலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதற்காக ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகிறார்கள். ஒருநாளைக்கு மயானத்துக்கு 200 உடல்கள் வருகின்றன.

அதே நேரத்தில் தலைநகர் பீஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அமைத்த தகனமேடை பகுதியில் உடல்கள் குவிந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. மேலும், சீனாவில் கொரோனாவால் 60 சதவீதம் பேர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. லட்சக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் என மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்