சென்னை மக்களை வாழவைத்த KPY பாலா!

சென்னையில் ‘மிக்ஜாம்‘ புயலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புள்ளாகி இருக்கிறது. பெரும்பாலான மக்கள் உணவு, குடிநீர் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவி பிரபலமான KPY பாலா வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் கொடுத்து உதவி செய்திருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர், “ வந்தாரை வாழவைக்கும் சென்னை; என்னையும்  வாழ வைத்தது. என்னை வாழவைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி இது. 2015-ல் வெள்ளம் வந்தபோது உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது என்னிடம் பணம் இல்லை.

அதனால் தான் இப்போது என் கணக்கில் இருந்த சுமார் ரூ.2 லட்சத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1000 கொடுத்து இருக்கிறேன்“ என்று கூறியுள்ளார். ஏற்கனவே பாலா பல உதவிகளை மக்களுக்குச் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இலவச ஆம்புலன்ஸ் சேவை ஒன்றைத் தொடங்கி வைத்திருந்தார். தன்னால் இயன்ற உதவிகளை எளியோர்களுக்கு செய்துவரும் பாலாவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இது போன்ற உங்களுடைய மேலும் பல சந்தேகங்களை தெரிந்து கொள்ள உங்கள் கேள்விகளை பதிவிடுங்கள்..உங்களுக்கான பதில் வாசகர் சாய்ஸில் இடம்பெரும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்