வெள்ளத்தில் சிக்கிய நமீதா, குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு

 

மிக்ஜாம் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை துரைப்பாக்கத்தில் 6 அடி உயர வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா அவரது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இது போன்ற உங்களுடைய மேலும் பல சந்தேகங்களை தெரிந்து கொள்ள உங்கள் கேள்விகளை பதிவிடுங்கள்..உங்களுக்கான பதில் வாசகர் சாய்ஸில் இடம்பெரும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்