‘அயலான்‘ படத்தின் ரிலீஸை உறுதி செய்த படக்குழு

 

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அயலான்‘. இதில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். பல தடைகளால் இப்படம் வெளியிடாமல் தள்ளிப்போன  நிலையில் ஒரு வழியாக அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. பட வெளியீட்டில் சிக்கல் என ஒரு செய்தி வெளியான நிலையில் அதற்கு நேற்றே மறுப்பு தெரிவித்து விளக்கத்தையும் அளித்தது படக்குழு.

அடுத்து படத்தின் பொங்கல் வெளியீட்டை மீண்டும் உறுதி செய்துள்ளது. அதில், “படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் அதிக நாடுகளிலும், அதிக தியேட்டர்களிலும் இருக்கும். இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களை விட மிக அதிகமாக இருக்கும். 2024 பொங்கல் வெளியீடு, “ என புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்கள். இதனால், பொங்கல் போட்டியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதை அழுத்தமாய் ‘அயலான்‘ குழு தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்