பிரபல இயக்குனரின் பூஜை அறையை பார்த்து வாயடைத்து போன உதயநிதி

இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்து ‘பரியேறும் பெருமாள்‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். இது கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் படத்தில் கூறப்பட்டிருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ், தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

குறிப்பாக இயக்குனர்களின் இமயமான பாரதிராஜாவே அந்த படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரின் முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றதால் அவரின் இரண்டாவது படம் முன்னணி ஹீரோவை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடித்த ‘கர்ணன்‘ படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் முதல் எடுத்த இரண்டு படங்களிலேயே மிகப்பெரிய கவனத்தை பெற்றுவிட்ட மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்‘ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில், இதில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். மேலும் இவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இயக்குனர் மாரி செல்வராஜை பலரும் இன்னொரு விஷயத்துக்காக புகழ்வார்கள். அது விலங்குகளையும் அவர் நடிக்க வைப்பது தான். ‘பரியேறும் பெருமாள்‘ படத்தில் நாய், ‘கர்ணன்‘ படத்தில் கழுதை ஆகிய விலங்குகளை பயன்படுத்தியிருந்த அவர் ‘மாமன்னன்‘ படத்தில் பன்றிக்குட்டிகளை பயன்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக பெரும்பாலானோர் எப்போதும் இந்தச் சமூகத்தில் பன்றியை எப்படி இழிவாக பார்க்கிறார்களோ அதேபோல்தான் ஒடுக்கப்பட்டவர்களையும் பார்க்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தார். மேலும் பல ஆண்டு சினிமா வரலாற்றில் ஒரு கதாநாயகன் கையில் பன்றிக்குட்டி ஒன்று தவழ்ந்ததும் இப்படத்தில் தான் முதல்முறை.

இந்த மாதிரி விஷயங்கள் போதும் இவர் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை புரிந்துகொள்வதற்கு. இந்த சூழலில் மாரி செல்வராஜின் வீட்டில் பூஜை அறை இருக்காது என்பது தெரியவந்திருக்கிறது. அதாவது மாரி செல்வராஜ் அடிப்படையில் நார்த்திகவாதி. அதேபோல்தான் அவருடைய மனைவி. காதல் திருமணம் செய்துகொண்ட இவர்கள் தங்களது திருமணத்தை பெரியவர்களின் வற்புறுத்தலால் கோயிலில் வைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அதேசமயம் மாரி செல்வராஜின் வீட்டில் பூஜை அறை இருக்காது.

அதற்கு மாறாக பன்றிக்குட்டியின் படங்கள் பல இருக்குமாம். ஒருமுறை மாரி செல்வராஜின் வீட்டுக்கு  சென்ற உதயநிதி ஸ்டாலின் அதை பார்த்துவிட்டு என்ன சார் ஒரே பன்றிக்குட்டி ஃபோட்டோவா வெச்சிருக்கீங்க என கேட்டதற்கு, எனக்கு பன்றிக்குட்டிகள் என்றால் அவ்வளவு பிடிக்கும் சார் என்று கூறியுள்ளார் மாரி செல்வராஜ். இதனை அவரும், அவரது மனைவி திவ்யாவும் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்