மது விலக்கு பலருக்கு வாழ்வளித்துள்ளது- முதல்வர் பெருமிதம்

பீஹார் மாநிலத்தில் மது விலக்கு பலருக்கு வாழ்வளித்துள்ளது என்று முதலமைச்சர் நித்தீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கால் பலர் மது அருந்துவதை விட்டு மகிழ்சியாக வாழ்கின்றனர். மது விலக்கை பலர் வரவேற்றுள்ளனர். ஆனால் சிலர் இதை எதிர்க்கின்றனர் என்பது தான் வேதனையான விஷயம் என்றார்.

கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்ட அவர், மது பழக்கத்தில் இருந்து மீண்டவர்களுக்கு, தொழில் தொடங்குவதற்கு அரசு சார்பில், தலா ஒரு லட்சம் ருபாய் வழங்கப்படும் என்றார். தேவைப்பட்டால் இந்த தொகை உயர்த்தப்படும் என்றும், ஆனால் யாரும் மீண்டும் இந்த தொழிலில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தார்.

பீஹார் மாநிலத்தில் நித்தீஷ்குமார் அரசால், கடந்த 2016 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்