இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘கஸ்டடி‘. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இப்படம் கடந்த மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்து இருந்தனர்.
இந்நிலையில், ‘கஸ்டடி‘ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கஸ்டடி‘ திரைப்படம் ஜூன் 9-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.










