சிறந்த படத்திற்கான சர்வதேச விருதை வென்ற ‘இராவண கோட்டம்‘

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில், சாந்தனு நடிப்பில் வெளியான படம் ‘இராவண கோட்டம்‘. இதில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் இணைந்து பிரபு, இளவரசு, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ள நிலையில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ‘இராவண கோட்டம்‘ திரைப்படம் ராஜஸ்தானில் நடைபெற்ற ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் என 2 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இதனை நடிகர் சாந்தனு தனது சமூக வலைளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்