‘பையா‘ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் லிங்குசாமி, ஆர்யா? கார்த்தி? யார் ஹிரோ தெரியுமா?

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘பையா‘. இப்படம் நல்ல வரவேற்பையும், மாபெரும் வெற்றியையும் பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், இதில் உள்ள அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது.

ஒரு சாலைப் பயணத்தின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ‘பையா படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய சில தகவல்கள் வெளிவந்தது.

அப்படத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால் இப்போது ‘பையா‘ கூட்டணியே மீண்டும் இணைய உள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் கார்த்தியை சந்தித்து ‘பையா 2‘ கதையை லிங்குசாமி சொன்னதாகவும், அவருக்கு கதை பிடித்துப் போய் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்