நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பொம்மை‘. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ‘பொம்மை‘ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 16-ம் தேதி பொம்மை படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.










