சினிமா துறை நிரந்தரம் இல்லாத ஒரு வாழ்க்கை – நடிகை ராஷிகன்னா சொன்ன ரகசியம்

தமிழில் ‘இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்க தமிழன், திருச்சிற்றம்பலம்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை ராஷிகன்னா.

இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 4‘ படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சினிமா அனுபவங்கள் குறித்து ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், “ நான் யாருடைய ஆதரவும், சினிமா பின்னணியும் இல்லாமலேயே திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்தேன். கதாநாயகியாக நல்ல பெயரை தக்க வைத்துக்கொண்டேன். வெற்றிகள் வரும்போது எனது அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை. ஆனாலும் நடிகையாக நான் எதிர்பார்ப்பது ரசிகர்கள் அன்பை பெறுவதைத்தான்.

நமது திறமையை நாம் எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது எனது கருத்து. நிரந்தரம் இல்லாத சினிமா துறை வாழ்க்கையில் கதாநாயகிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய முடியாது. கதாநாயகியாக இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைத்து நல்ல நிலைக்கு செல்லலாம். வாய்ப்புகள் இல்லாமல் கூட போகலாம்“ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்