இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்‘ படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28-ம் தேதி இதன் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்து இருந்தது.
‘பொன்னியின் செல்வன் 2‘ வெளியான 10 நாட்களில் ரூ.300 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில், தற்போது அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் படம் வெளியிடப்பட்டுள்ளது.










