இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி‘ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் ‘முகமூடி, யுத்தம் செய், அஞ்சாதே, நந்தலாலா, துப்பறிவாளன், பிசாசு 1, பிசாசு 2‘ என பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தன்னுடைய இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் பாடல்கள், பின்னணி இசை என இரண்டுக்குமே மிக முக்கியத்துவம் கொடுப்பவர்.
இளையராஜா உட்பட பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் தான் விரும்பும் விதமாக இசையமைக்க வேண்டும் என்பதற்காகவே அரோல் குரோலி என்பவரை ‘பிசாசு‘ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுததினார்.
இயக்குனர் மிஷ்கின் சில காலமாக நடிக்கவும் தொடங்கியுள்ளார். தற்போது விஜய்யின் ‘லியோ‘ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்‘ படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர், நடிகர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் மிஷ்கின். தனது சகோதரரும் ‘சவரக்கக்தி‘ படத்தின் இயக்குனருமான ஜி.ஆர்.ஆதித்யா எழுதி இயக்கும் ‘டெவில்‘ என்ற படத்தில் தான் இசையமைக்க உள்ளார் மிஷ்கின்.
இதுபற்றி ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.










