இராணுவ வீரராக மாறிய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்‘ மற்றும் ‘அயலான்‘ ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீஸ்க்கு காத்திருக்கிறது. ‘மாவீரன்‘ படம் ஜூலை மாதத்திலும், ‘அயலான்‘ படம் தீபாவளி அன்றும் வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்சனில் கமல் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்த படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது. பின்னர் ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அங்கே பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதால் படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட இதுவரை பார்த்திராத தோற்றத்தில் வலம் வருகிறார். சமீபத்தில் ரசிகை ஒருவருடன் இந்த தோற்றத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்