மலையாளத்தில் என்ட்ரீ கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் அதிகம் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் மட்டும் முக்கியமான படங்களில், குறிப்பாக மணிரத்னம் இயக்குகின்ற படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கால்ஷீட் கொடுத்துவிடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் ஐஸ்வர்யா ராய். இந்நிலையில் அவர் முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

மலையாள நடிகர் திலீப் நடிக்க உள்ள அவரது 148-வது படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை பிரபல போட்டோகிராபர் ஷாலு என்பவர் தெரியப்படுத்தி உள்ளதுடன், திலீப் 148-வது படத்திற்கான கிளாப் போர்டை வைத்து ஒரு பெண்மணி தனது முகத்தை மறைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்