பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆர்யன் கானை விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 25 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் அப்போது போதை பொருள் தடுப்பு அதிகாரியாக இருந்த சமீர்வான்கடே உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். தற்போது சென்னையில் வரி செலுத்துவோர் சேவை பிரிவு தலைமை அதிகாரியாக பணியாற்றி வரும் சமீர்வான்கடே சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் இரண்டு நாட்களாக தினமும் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும் முன் அவரை பேட்டி எடுக்க மீடியாக்கள் முயன்றன அப்போது அவர் நீதிதுறையின் மீது நம்பிக்கை உள்ளது என்று மட்டும் கூறிச் சென்றார்.










