‘லியோ‘ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு நடிகை திரிஷா நடித்து வருகிறார்.

மேலும் இவர்களுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இங்கு  விஜய் அர்ஜுன் சம்மந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் தற்போது படமாகி வருகிறது.

இதன் பிறகு த்ரிஷா-விஜய் சம்பந்தப்பட்ட ரொமான்டிக் காட்சிகள் படமாக உள்ளது. சென்னையில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் படமாக்கப்போகிறார்.

அங்கு கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கி முடித்ததும், பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். மேலும் ‘லியோ‘ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரைக்கு வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்