கிழிந்த ஷூவை அணிந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர்!

பாலிவுட் நடிகரான சல்மான் நடித்த ‘ கிஸி கா பாய் கிஸி கி ஜான்‘ என்ற திரைப்படம் 2 நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. இதில் பூஜா ஹெக்டே, வெங்கடேஷ், ஜெகபதி பாபு, ராகவ் ஜூயல் மற்றும் பலக் திவாரி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்து இருந்தனர். இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.

தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக் ஆக இந்த படம் தயாராகியுள்ளது. இந்நிலையில் சல்மான் கானுடன் நடித்தவர்களான நடிகை பலக் திவாரி மற்றும் ஜேஸ்சி கில் ஆகியோர் பட விளம்பரத்திற்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் அளித்த பேட்டியின் போது, அவர்கள் நடைமுறை வாழ்க்கையில் பலரையும் காண்பது போன்று சல்மான் கான் எதார்த்தவாதியாக காணப்பட்டார் என கூறினர்.

படப்பிடிப்புக்கு அவர் கிழிந்து போன ஷூக்களை அணிந்து வருவது வழக்கம் என கூறி பேட்டி எடுப்பவரை சற்று அதிர்ச்சி அடைய வைத்தனர். எனினும் அவர்கள் தொடர்ந்து அந்த விஷயங்களை நினைவுகூர்ந்து பேசும்போது, உண்மையில் அதிக சம்பளம் வாங்க கூடிய நபராக இருந்தபோதும், அவர் சாதாரண மனிதராகவே நடந்து கொள்கிறார் என கூறியுள்ளார். அவரிடம் ஏன் ஓட்டையான ஒரு ஷூவை அணிந்து வருகிறீர்கள் என பலக் திவாரி கேட்டிருக்கிறார்.

அதற்கு பதிலாக அவர், ‘என்னிடம் இருக்கிற ஷூக்களிலேயே அதிக சவுகரியம் தர கூடிய ஒன்றாக உள்ளது. இதனை விட வேறு எதுவும் எனக்கு நன்றாக இருப்பது போன்று உணரவில்லை‘ என்று கூறியுள்ளார். மேலும் எளிமையான வாழ்வை வாழ்வதும், உதவும் குணம் கொண்டவராகவும் இருக்கிறார் “என பலக் திவாரி கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்