‘லியோ‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென்மாவட்டத்தில் நடத்த திட்டமிடும் நடிகர் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘லியோ‘. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இரண்டு மாதங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளது. மேலும் விஜய் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமீப காலமாக விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியலை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலையின் பிறந்த நாட்களில் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்குமாறு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை கேட்டு கொண்டார் நடிகர் விஜய்.

அதன் அடிப்படையில் தென் மாவட்டங்களில் உள்ள தனது ரசிகர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக ‘லியோ‘ படத்தின் ஆடியோ விழாவை தென் மாவட்டத்தில் நடத்துவதற்கு விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ‘லியோ‘ படம் அக்டோபர் 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்