அம்மாவான பிரபல நடிகை…!

தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு‘ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன் பிறகு ‘தகராறு, ஆடு புலி, கொடிவீரன், சவரக்கத்தி, காப்பான்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டில் துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதையடுத்து தன் கர்ப்பமாக இருந்தபோது மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார் நடிகை பூர்ணா. இந்நிலையில் நேற்றைய முன்தினம் நடிகை பூர்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை தனது சோஷியல் மீடியாவில் பதிவு செய்துள்ள பூர்ணா, நாங்கள் ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார் நடிகை பூர்ணா.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்