தற்காப்பு பயிற்சிக்காக தாய்லாந்து சென்றிருந்த சிம்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு கடைசியாக நடித்த படம் ‘வெந்து தணிந்தது காடு‘. இப்படத்திற்கு பிறகு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள படம் ‘பத்து தல‘. இப்படம் கன்னடத்தில் வெளியான முப்தி படத்தின் ரீ-மேக்காக உருவாகி உள்ளது. இதில் சிம்புக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் நாளை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடக்கிறது.  இந்நிலையில், கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48-வது படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்திற்காக சில தற்காப்பு பயிற்சிகளையும், உடல் எடையையும் பிட்டாக மாற்ற தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வந்தார் சிம்பு. தற்போது பத்து தல இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை திரும்பி உள்ளார். தற்போது சிம்புவின் இந்த ஸ்டைலான புதிய தோற்றம் வைரலானது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்