குறுகிய காலத்தில் நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் பிரபல நடிகை – அதிர்ச்சியடைந்த சக நடிகைகள்!!!

கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்‘ படத்தில் ஜோடியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு பிறகு மிருணாள் தாகூர் மார்க்கெட் உயர்ந்தது. அவருக்கு பல மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் சூர்யாவின் 42-வது படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இன்னொரு தமிழ் படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் நானி ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு மிருணாள் தாகூர் ரூ.6 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகையாக இவர் உயர்ந்துள்ளார். சினிமாவுக்கு வந்து குறுகிய நாட்களிலேயே மிருணாள் தாகூர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருப்பது சக நடிகைகளுக்கு ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்