‘கண்ணை நம்பாதே‘ படத்தில் நிறைய சவால்களை மேற்கொண்ட உதயநிதி – நடிகை ஆத்மிகா விளக்கம்

நடிகரும் மற்றும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது வெளியாக உள்ள படம் ‘கண்ணை நம்பாதே‘. இப்படத்தை மு.மாறன் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘மீசைய முறுக்கு‘ படத்தின் கதாநாயகி ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து நடிகை ஆத்மிகா கூறுகையில், “கண்ணை நம்பாதே படம் எனது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதுவரை நான் நடிக்காத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விடுவேன்.

இந்த படம் எனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமையப்போகிறது. இந்த கதையை இயக்குனர் சொன்னபோது கதையோடு முழுமையாக ஒன்றிவிட்டேன். அந்த அளவுக்கு ஒரு உணர்வுபூர்வமான கதையாக இருந்தது. கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் உடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது. அவர் நிறைய சவால்களுக்கு இடையில் இந்த படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்“ என்று நடிகை ஆத்மிகா கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்